கதிர்காமம், கெக்கிராவ பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

கதிர்காமம், கெக்கிராவ பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

கதிர்காமம், கெக்கிராவ பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2017 | 12:31 pm

கதிர்காமம் மற்றும் கெக்கிராவ பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் ஒன்று பின்னோக்கி நகர்ந்தவேளையில், பஸ்ஸின் பின்புறம் உறக்கத்தில் இருந்த மூவர் விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்போது இரண்டு பேர் உயிரிழந்ததுடன்,மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சிலரே விபத்திற்குள்ளானதுடன், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கல்நேவ – கெக்கிராவை வீதியில் கெப் வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

கெப் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல்போனதால், நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கல்நேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்