கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்தினால் உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்தினால் உயிரிழப்பு

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்தினால் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 9:43 pm

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த இருவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றிருந்த மூவர், அங்குள்ள மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின் அருகில் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த நிலையில், பஸ்ஸின் சாரதி பஸ்ஸை பின்னோக்கி நகர்த்தியுள்ளார்.

இதன்போது, பஸ் சக்கரத்தில் அகப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அவர்களில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிளிநொச்சி – பாரதிபுரத்தைச் சேர்ந்த 18 வயதான வெல்ஸன் விது மற்றும் கிளிநொச்சி – இராமநாதபுரத்தைச் சேர்ந்த 41 வயதான அஸன் ஹரன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

குறித்த பஸ்ஸின் சாரதியாக ஹரன் பணியாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் உறக்கத்தில் இருந்த போது வேறு ஒருவர் பஸ்ஸை செலுத்தியுள்ளமையினால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றைய நபர் கதிர்காமம் வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்