ஒலுவில்லில் காரில் சிறுவனின் சடலம்: பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது

ஒலுவில்லில் காரில் சிறுவனின் சடலம்: பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது

ஒலுவில்லில் காரில் சிறுவனின் சடலம்: பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது

எழுத்தாளர் Bella Dalima

08 Aug, 2017 | 10:38 pm

அம்பாறை – ஒலுவில் பகுதியில் நேற்று முன்தினம் (06) கார் ஒன்றில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது.

அம்பாறை தேசிய வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உடலின் சில பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்விற்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிறு மாலை 5.30 மணியளவில் சிறுவனின் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அதன் உரிமையாளர் திறந்த போது காருக்குள் வீழ்ந்த நிலையில் சிறுவனைக் கண்டுள்ளார்.

பின்னர் பிரதேச மக்கள் இணைந்து சிறுவனை ஒலுவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்