உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2017 | 7:20 am

கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றது.

இன்று முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்காக 315,227 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

பரீட்சை கடமைகளுக்காக சுமார் 28,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.

அத்துடன் பரீட்சை மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்