ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: மன்னாரில் ஆறாம் நாள்

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: மன்னாரில் ஆறாம் நாள்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 8:32 pm

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் ஆறாம் நாள் இன்றாகும்.

இந்த செயற்றிட்டம் இன்று மன்னார் மாவட்டத்திலும் எம்பிலிப்பிட்டியவிலும் முன்னெடுக்கப்பட்டது

மன்னார் மாவட்டத்தின் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம், பாலம்பிட்டி, பெரிய பன்றிவிரிச்சான் ஆகிய இடங்களுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் இன்று சென்றிருந்தனர்.

மற்றுமொரு குழுவினர் மன்னார் மாவட்டத்தின் கணேசபுரம், சிலாவத்துறை, சவேரியாபுரம், முத்தறிப்புத்துறை, அறிப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று மக்களைத் தௌிவூட்டினர்.

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் மற்றைய குழுவினர் எம்பிலிப்பிட்டிய பகுதிக்கு சென்று மக்களைத் தௌிவூட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்