மூன்றாவது முறையாகவும் ருவாண்டாவின் அதிபரானார் பால் ககாமி

மூன்றாவது முறையாகவும் ருவாண்டாவின் அதிபரானார் பால் ககாமி

மூன்றாவது முறையாகவும் ருவாண்டாவின் அதிபரானார் பால் ககாமி

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 3:44 pm

ருவாண்டா நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பால் ககாமி 99 சதவீத வாக்குகளைப் பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராகியுள்ளார்.

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில், அதிபர் பால் ககாமி 98 சதவீத வாக்குகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றார்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக்கட்சி வேட்பாளர் பிராங்க் ஹபினேசாவும், சுயேட்சை வேட்பாளர் பிலிப்பி மபயிமனாவும் படுதோல்வி அடைந்தனர்.

இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மற்றொரு சுயேட்சை வேட்பாளரும், தொழில் அதிபருமான டயானா ஷிமா ரிவிகராவை தேர்தல் ஆணைக்குழு தகுதி இழப்பு செய்துவிட்டது.

இந்த தேர்தலுக்கு முன்னதாக பால் ககாமி அதிபர் தேர்தல் பற்றி குறிப்பிடுகையில், “அதிபர் தேர்தல் வெறும் சம்பிரதாயம் மட்டுமே” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பால் ககாமி, 17 ஆண்டுகளாக அதிபர் பதவி வகித்து வருகிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்