English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
06 Aug, 2017 | 4:26 pm
அனுஷ்காவைத் திருமணம் செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் பிரபாஸ் நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
பாகுபலி படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.
தற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன.
‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது பிரபாசுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் பரவின.
இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தனது திருமணம் தொடர்பாக முதன் முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
”தற்போது திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. இதனால் எனது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நினைக்கிறேன். திருமணம் குறித்து நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், ஊடகங்கள் என்னையும், என்னுடன் சேர்ந்து நடித்த ஒரு நடிகையையும் (அனுஷ்கா) இணைத்து செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லை. தொடக்கத்தில் இது போன்ற செய்திகள் வந்தால் மிகவும் மனம் வருந்துவேன். இப்போது பழகிவிட்டது. இரண்டு படங்களில் நாங்கள் தொடர்ந்து சேர்ந்து நடித்ததால் தவறாகப் புரிந்துகொண்டனர். தற்போது என்னுடைய முழு கவனமும் ‘சாஹோ’ படத்தில் உள்ளது,”
என அவர் கூறினார்.
06 May, 2022 | 05:39 PM
25 Feb, 2021 | 03:27 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS