தங்கப் பதக்கத்தை தவறவிட்ட உசைன் போல்ட்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தங்கப் பதக்கத்தை தவறவிட்ட உசைன் போல்ட்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

தங்கப் பதக்கத்தை தவறவிட்ட உசைன் போல்ட்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 3:31 pm

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் மூன்றாவது இடம் பிடித்து, அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.

இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் மூன்றாவது இடம் பிடித்தார்.

இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கட்லின் தங்கப் பதக்கம் வென்றார்.

கிறிஸ்டியன் கோல்மேன் வௌ்ளிப் பதக்கத்தை வென்றார்.

உசைன் போல்ட் 2017 ஆம் ஆண்டு தடகளத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவரது இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியாமற்போனமைக்கு அவரது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

30 வயதான உசைன் போல்ட் என்கிற உசைன் செயின்ட் லியோ போல்ட், ஜமைக்கா நாட்டினைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர்.

100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 X 100 மீட்டர் என அனைத்திலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்.

லண்டன் போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக போல்ட் அறிவித்திருந்தார்.

நேற்றைய போட்டியில் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்