டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகளைக் கொண்ட ”டாய்லெட் பேப்பர்” : அமேஸானில் விற்றுத்தீர்ந்தது!

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகளைக் கொண்ட ”டாய்லெட் பேப்பர்” : அமேஸானில் விற்றுத்தீர்ந்தது!

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகளைக் கொண்ட ”டாய்லெட் பேப்பர்” : அமேஸானில் விற்றுத்தீர்ந்தது!

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 5:00 pm

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்ட டாய்லெட் பேப்பர் அமேஸான் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தன.

”அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பிடிக்காதா? அதனை வெளிப்படுத்த மிக எளிதான ஒரு வழி” என கடந்த வௌ்ளிக்கிழமை காலை விளம்பரம் வௌியாகியிருந்தது.

நண்பகல் வேளையில் டாய்லெட் பேப்பர்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், விளம்பரம் அகற்றப்பட்டது.

டாய்லெட் பேப்பரில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராவதற்கு முன்பே தனது டிவிட்டரில் பதிவு செய்த கருத்துக்கள் கூட இடம்பெற்றிருந்தது.

அதாவது, 2013 ஆம் ஆண்டில் இருந்து அவர் ட்வீட் செய்த கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன.

அமேஸான் நிறுவனரும், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தக்காரருமான ஜெஃப் பிஸோசை, சில மாதங்களுக்கு முன்பு டொனால்ட் ட்ரம்ப் கடுமையான விமர்சித்திருந்தார்.

வாஷிங்டன் போஸ்ட்டில் தவறான செய்திகள் வெளியாவதாக அவர் குற்றம்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்