குருணாகல், அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

குருணாகல், அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

குருணாகல், அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு, 8 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 9:32 pm

குருணாகல், அனுராதபுரம் மாவட்டங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குருணாகல் – தம்புள்ள வீதியில் படகமுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் பயணித்த காரும், டிப்பர் வண்டியும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த இவர்களின் பிள்ளைகள் குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒப்பாகமுவ பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதேவேளை, அனுராதபுரம் – புத்தளம் வீதியில் ஜேர்மன் பாலத்திற்கு அருகில் கார் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த நால்வர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

இந்நிலையில், அனுராதபுரம் – மிஹிந்தலை பிரதான வீதியில் யாழ்ப்பாண சந்தியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் முச்சக்கரவண்டியொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின.

காரின் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்