கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 4:13 pm

மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்துக்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பமானது Tobii eye tracker என்ற வெர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டை முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விண்டோஸ் 10 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் பரிசோதனை முயற்சியாக இது செயற்படுத்தப்பட்டு வருகிறது.

விண்டோஸ் இயங்குதளங்களில் முதலில் இந்த சொஃப்ட்வெயாரை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதனைத்தொடர்ந்து, Eye Control என்ற வசதியை ஆக்டிவேட் செய்து அதன்மூலம் கம்ப்யூட்டரில் தோன்றும் மௌஸ் மற்றும் கீபோர்ட் ஆகியவற்றிடம் பார்த்தும், பேசியும் இயக்க முடியும்.

”முதலாவதாக, Eye Control மென்பொருளை உற்று நோக்குவதன் மூலம் இதனை உபயோகிக்க முடியும். நாம் எதை பார்க்கின்றோம் என இதனால் துல்லியமாக கணிக்க முடியும். அதற்கேற்ப இது இயங்கும் திறன் படைத்தது. இருப்பினும், சூரிய ஒளி அதிகம் உள்ள இடங்களில் இந்த வசதியை உபயோகிப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அதனை சரிசெய்யும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்பட்டு வருகின்றன,” என மைக்ரோசொஃப்ட் நிறுவனத்தின் தலைமை மென்பொறியியலாளர் டோனோ சர்கார் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்