ஒரே விடயம் தொடர்பில் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ

ஒரே விடயம் தொடர்பில் இருவேறு கருத்துக்களைத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 9:20 pm

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று (05) தெரிவித்திருந்ததாவது,

[quote]என்னுடைய நிலைப்பாடு இங்கு முக்கியமல்ல. மக்களின் நிலைப்பாடே மிகவும் முக்கியம். அனைவரும் கையெழுத்திட வேண்டியதில்லை. நான் வாக்களிக்க செல்லப்போவதில்லை. பாராளுமன்றத்தில் இதுவரை நான் வாக்களித்ததில்லை. ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானமே அது.[/quote]

அவர் இன்று  (06) தெரிவித்ததாவது,

[quote]இந்த அரசாங்கத்திற்கு எதிராக சென்று மிக விருப்பத்துடன், ரவிக்கும் எதிராக நான் வாக்களிப்பேன். இதனைத் தவிர்ந்திருக்க யாருக்கும் முடியாது. நான் முதல் தடவையாக இதில் தான் வாக்களிக்கிறேன். அதிகளவானோர் வாக்களிப்பர் என நான் நினைக்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரும் வாக்களிப்பர்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்