ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சந்திப்பு

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சந்திப்பு

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் சந்திப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 Aug, 2017 | 10:07 pm

ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் வட மாகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வட மாகாண சபை அமைச்சர்களும் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

யுத்தத்திற்கு பின்னர் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்திப் பணிகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

யுத்தம் இடம்பெற்ற இடங்களின் அபிவிருத்தி, நாட்டில் காணப்படும் இனவாதத்தை இல்லாதொழித்தல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்