English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
05 Aug, 2017 | 7:51 pm
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், குசல் மென்டிஸ் சதமடித்து நம்பிக்கையூட்டினார்.
ஃபாலோ-ஒன்னில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களைப் பெற்றிருந்த அதேவேளை, மேலும் 230 ஓட்டங்களைப் பெற்றாலே இலங்கை இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும்.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 622 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.
பதிலளித்தாடிய இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 50 ஓட்டங்களுடன் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 183 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
நிரோஷன் திக்வெல்லவினால் மாத்திரமே அரைச்சதத்தைக் கடக்க முடிந்தது.
பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஃபாலோ-ஒன்னில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை மீண்டும் தடுமாற்றத்துக்குள்ளானது.
எனினும், குசல் மென்டிஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஜோடி பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 191 ஓட்டங்களைப் பகிர்ந்து அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளித்தது.
குசல் மென்டிஸ் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார்.
குசல் மென்டிஸ் 110 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க திமுத் கருணாரத்ன 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
20 Jul, 2022 | 09:42 PM
17 Jul, 2022 | 05:36 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS