லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு

லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 7:51 pm

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி காணாமற்போயுள்ளதாக அவரின் மனைவி முறைப்பாடு செய்துள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

பல தடவைகள் நீதிமன்றத்தைப் புறக்கணித்ததன் காரணமாக, மேன்முறையீட்டு மற்றும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாக இருக்கும் போது, மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டபோதும், அவர் மீண்டும் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.

8 வருடங்களுக்கு முன்னர் கொழும்பை அண்மித்த பல பகுதிகளில் வௌ்ளை வேனில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான லெப்டினன்ட் கேர்னல் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி தலைமறைவாகவில்லை என்றால், நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கொழும்பு மேலதிக நீதவான ரங்க திசாநாயக்க முன்னிலையில் பொலிஸார் இன்று அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்