ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 4:13 pm

அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 32 பேரின் கையொப்பத்துடன் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவிடம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வருகை தந்து நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்ததாக அவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்