ரங்கலயில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை: 12 பேர் கைது

ரங்கலயில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை: 12 பேர் கைது

ரங்கலயில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை: 12 பேர் கைது

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 3:47 pm

கண்டி – ரங்கல, போப்பிட்டிகம பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (01) இரவு ஏற்பட்ட மோதலின் போது 26 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நேற்று 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 12 சந்தேகநபர்களில் 10 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியொன்றும், 2 அடி நீளமான இரும்புக் கம்பியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 12 பேரையும் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ரங்கல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்