முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் மேலும் சில தரப்பினரும் தொடர்பு

முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் மேலும் சில தரப்பினரும் தொடர்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 8:42 pm

முறிகள் கொடுக்கல் வாங்கலுடன் மேலும் சில தரப்பினரும் தொடர்புபட்டுள்ளமையினால், அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என ஊழலுக்கு எதிரானவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான முதல் கூட்டம் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

அதிவேக வீதியின் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 15 பில்லியனை அவசரமாகப் பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார விவகார அமைச்சு 2015 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வேளையில் நிதி அமைச்சராக இருந்தவரும் பெருந்தெருக்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் உயர்கல்வி அமைச்சர், திறைசேரியின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில் மலிக் சமரவிக்ரமவும் பங்கேற்றிருந்தார்.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படாத அரசாங்கத்தின் எவ்வித பதவிகளையும் வகிக்காத சந்தர்ப்பத்தில், மலிக் சமரவிக்ரம இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட போது, அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பதவியை வகித்தார்.

தான் கூட்டத்தில் பங்கேற்றதாக நியூஸ்பெஸ்ட் அவ்வேளையில் வினவிய போது அவர் உறுதிப்படுத்தியிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்