தரவுகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டாம்: அர்ஜூன் அலோசியஸிற்கு ஆணைக்குழு உத்தரவு

தரவுகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டாம்: அர்ஜூன் அலோசியஸிற்கு ஆணைக்குழு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 3:58 pm

ஆணைக்குழுவின் பொறுப்பிலுள்ள கையடக்க தொலைபேசியின் தரவுகளை மாற்றியமைக்கவோ, அழிப்பதற்கோ முயற்சிக்க வேண்டாம் என முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜூன் அலோசியஸிற்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

அலோசியஸ் தனது மனைவியின் கையடக்க தொலைபேசியூடாக அவரது அப்பிள் கையடக்க தொலைபெசியின் கணக்கில் பிரவேசிக்க முயற்சித்தமை தொடர்பில் ஆணைக்குழு ஊடாக தகவல் வௌியாகியது.

இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறும் முறிகள் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்