ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: கிளிநொச்சியில் மூன்றாம் நாள்

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: கிளிநொச்சியில் மூன்றாம் நாள்

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 8:09 pm

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் மூன்றாம் நாள் இன்றாகும்.

இத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று தௌிவூட்டப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரம், கனகாம்பிகை குளம், திருவையாறு, பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர்.

இதன்போது துண்டுப்பிரசுரங்கள் வழங்கி மக்கள் தௌிவுபடுத்தப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, இயக்கச்சி, கரந்தாய், முகமாலை ஆகிய பகுதிகளுக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் இன்று சென்றிருந்தனர்.

இதேவேளை, மற்றைய குழுவினர் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு சென்று மக்களைத் தௌிவூட்டினர்.

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூரியவெவ, மஹஇதிவெவ உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்