இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 344 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 344 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 344 ஓட்டங்களைப் பெற்றது இந்தியா

எழுத்தாளர் Bella Dalima

03 Aug, 2017 | 9:05 pm

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ள இந்தியா, 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களை முதல் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

இதேவேளை, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் பிரதீப் உபாதைக்குள்ளானதுடன் அவரது நிலை குறித்து நாளையே தீர்மானிக்க முடியும் என பயிற்றுநரான நிக்கி போதாஸ் குறிப்பிட்டார்.

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக இன்று மலிந்த புஷ்பகுமாரவுக்கு டெஸ்ட் அறிமுகம் கிடைத்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா, 133 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஷிகர் தவான் 35 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 57 ஓட்டங்களையும் பெற்றதுடன், அணித்தலைவர் விராட் கோஹ்லி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், அடுத்து இணைந்த செட்டேஷ்வர் புஜாரா மற்றும் ரஹானே ஜோடி வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக 211 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தியது.

செட்டேஷ்வர் புஜாரா தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தையும், ரஹானே தனது ஒன்பதாவது டெஸ்ட் சதத்தையும் பூர்த்தி செய்தனர்.

17.4 ஓவர்கள் பந்துவீசிய நுவன் பிரதீப் காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக களத்தைவிட்டு வெளியேறினார்.

அவரது உடற்தகுதி குறித்து நாளை காலையே தீர்மானிக்க முடியும் என இலங்கை அணியின் பயிற்றுநரான நிக்கி போதாஸ் தெரிவித்தார்.

செட்டேஷ்வர் புஜாரா 128 ஓட்டங்களுடனும், ரஹானே 103 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்