பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள்?

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: சந்தேகநபர்கள் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள்?

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 8:07 pm

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஆவா குழு தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டது.

கோப்பாய் பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இருவரை நேற்று (01) கைது செய்ததாகவும் அவர்கள் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் என தமக்கு அறியக்கிடைத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

ஆவா குழுவினரால் இவ்வாறான நிலை தோன்றியுள்ளமைக்கு, இராணுவ முகாம்களை நீக்கியமை காரணமா என இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இராணுவ முகாம்கள் இருந்த காலத்திலேயே ஆவா குழு உருவாக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்