முகுந்தன் கனகேயின் சம்பளம் தொடர்பிலான தகவல் வௌியானது

முகுந்தன் கனகேயின் சம்பளம் தொடர்பிலான தகவல் வௌியானது

முகுந்தன் கனகேயின் சம்பளம் தொடர்பிலான தகவல் வௌியானது

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 8:50 pm

தகவல் அறியும் சட்டமும் வெளிப்படுத்தத் தவறிய ICTA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முகுந்தன் கனகேயின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பிலான தகவல்கள் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கிடைத்துள்ளன.

இலங்கை தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முகவரான ICTA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக முகுந்தன் கனகே செயற்படுகின்றார்.

கூகுள் லூன், இலத்திரனியல் அடையாள அட்டை, தேசிய கொடுப்பனவுத் தளம் என்பனவற்றை அவரின் தலைமையில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது வெற்றியளிக்கவில்லை என்பதுடன், அவை ஊழல்மிக்கவையாகவே காணப்பட்டது.

ஒரு வருட ஒப்பந்த அடிப்படையிலே அவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதியில் இருந்து 12 மாத காலத்திற்காக அவர் ICTA நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட உடன்படிக்கையின்படி, அவரின் மாதாந்த சம்பளம் 7,50,000 ரூபாவாகும்.

வாராந்தம் ஆகக்குறைந்தது மூன்று நாட்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என்பதுடன் வாகனம், எரிபொருள், குடும்பத்தின் அனைவருக்குமான காப்புறுதி வசதியும் அவருக்கு வழங்கப்பட்டது.

அத்துடன், மேலதிகக் கொடுப்பனவும் முகுந்தன் கனகேயின் சேவை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மாதாந்தம் 30 நாட்களும் பணியாற்றினார் என்று கருதினாலும், அவருக்கு ஒரு நாளைக்கான சம்பளம் 25,166 ரூபா 66 சதமாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்