காற்று – மின்சாரம் மூலம் புரத மா தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

காற்று – மின்சாரம் மூலம் புரத மா தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

காற்று – மின்சாரம் மூலம் புரத மா தயாரிப்பு: விஞ்ஞானிகள் சாதனை

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 5:56 pm

சர்வதேச ரீதியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகையில், காற்று மற்றும் மின்சாரம் மூலம் உணவுப்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்தில் உள்ள வி.டி.டி. தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், லபீர்னந்தா தொழில் நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இச்சாதனையை புரிந்துள்ளனர்.

காற்றில் இருந்து கார்பன்-டை-ஒக்சைடைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து புரத மா (Protein Powder) தயாரித்துள்ளனர்.

அதை மனிதர்களும் விலங்குகளும் உணவுப்பொருளாக பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

இந்த புரத மாவினை மின்சாரத்துடன் சேர்த்து எங்கு பயன்படுத்தினாலும் அது உணவுப்பொருளாக மாறும்.

மேலும், இதை நிலத்தில் இடுவதன் மூலம் பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக விளைச்சலைக் கொடுக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

food-electricity


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்