ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: தேசிய செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள்

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புதல்: தேசிய செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 7:58 pm

ஊழலுக்கு எதிரான இலங்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய செயற்றிட்டத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

யாழ். மாவட்ட தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவற்குழி, நாவற்குழி மேற்கு, கைதடி மத்தி, கைதடி மேற்கு, கச்சாய், வரணி, கொடிகாமம், அல்லாரை போன்ற பகுதிகளுக்கு நியூஸ்பெஸ்ட் குழுவினர் சென்றனர்.

இதன்போது துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து மக்களை தௌிவுபடுத்தினர்.

மற்றைய குழுவினர் வேலணை, மண்டைத்தீவு, புங்குடுதீவு பகுதிகளுக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வீட்டிற்கும் நியூஸ்பெஸ்ட் குழுவினர் விஜயம் செய்து, அவரின் குடுப்பத்தாருடன் கலந்துரையாடினர்.

இதேவேளை, மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர் மக்கள் இன்று தௌிவூட்டப்பட்டனர்.

 

 

20476529_1624781704248748_8879872297369530828_n 20525312_1624796440913941_6242101122911494772_n 20604313_1624755214251397_4727547238672887068_n

17952645_1624759137584338_8366253369902427710_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்