இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு

இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு

இளைஞர்கள் 11 பேர் கடத்தல்: தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 8:23 pm

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை குறித்தான வழக்குடன் தொடர்புடைய அனைவரையும் தராதரம் பாராமல் கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி. தசநாயக்க உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

2008 ஆம் ஆண்டு வௌ்ளை வேனில் கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கின் ஏழாவது சந்தேகநபரான முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி. தசநாயக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதால் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் தகுதி, தராதரம் பாராமல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு , விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைது செய்ய இன்று மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

இந்த பிடியாணையை நாட்டிலுள்ள சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி, அவரை உடனடியாகக் கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்