ஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி, 63 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி, 63 பேர் காயம்

ஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி, 63 பேர் காயம்

எழுத்தாளர் Bella Dalima

02 Aug, 2017 | 5:19 pm

ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராத்தில் உள்ள மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஈரான் எல்லையில் உள்ள குறித்த மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக ஹெராத் பொலிஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்திய நபர் கொல்லப்பட்டதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்