வறட்சி நிலையை ஆராய இராணுவ அதிகாரிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

வறட்சி நிலையை ஆராய இராணுவ அதிகாரிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

வறட்சி நிலையை ஆராய இராணுவ அதிகாரிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:56 pm

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் இராணுவ அதிகாரிகளை நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நடைமுறைப்படுத்தப்படும் இடர் முகாமைத்துவ செயற்பாடுகளின் தற்போதைய நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்