மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச சிகிச்சைகள் ஆரம்பம்

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச சிகிச்சைகள் ஆரம்பம்

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச சிகிச்சைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:24 pm

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் இன்று முதல் இலவச சிகிச்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதற்கு தேவையான மருந்துகள் நேற்று (31) மாலை மருந்து விநியோக பிரிவிலிருந்து நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் நோயாளர்களுக்காக 600 கட்டில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நோயாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வது தொடர்பில், அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் கடந்த செவ்வாய்க்கிழமை (25) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இதன்பிரகாரம், வைத்தியசாலையின் நிர்வாகத் தலைவராக முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அஜித் மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பணிப்பாளர் நாயகமாக டொக்டர் ரியர் அட்மிரல் N.E.W. ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்