மதுரங்குழியில் மீனவரின் சடலம் மீட்பு

மதுரங்குழியில் மீனவரின் சடலம் மீட்பு

மதுரங்குழியில் மீனவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:15 pm

புத்தளம் – மதுரங்குழி, தொடுவாய் முகத்துவாரம் பகுதியில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, தொடுவாய் முகத்துவாரத்தில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டது.

சிலாபம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களில் ஒருவர் கடந்த வௌ்ளிக்கிழமை (28) முதல் காணாமற்போயிருந்தார்.

காணாமற்போயிருந்த நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த மீனவர் சிலாபம் – வட்டக்கல்லி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்