பேரறிவாளனை பிணையில் விடுவிக்க சட்டத்தில் எந்தந் தடையும் இல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர்

பேரறிவாளனை பிணையில் விடுவிக்க சட்டத்தில் எந்தந் தடையும் இல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர்

பேரறிவாளனை பிணையில் விடுவிக்க சட்டத்தில் எந்தந் தடையும் இல்லை: தமிழக சட்டத்துறை அமைச்சர்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:39 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனை பிணையில் விடுவிக்க சட்டத்தில் எந்தந் தடையும் இல்லை என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளனை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து கோரி வருகின்றார்.

தமிழக சட்டமன்றத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலரும் இதனை வலியுறுத்தினர்.

இதையடுத்து, அரச தலைமை சட்டத்தரணி மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கே.பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த நிலையில், பேரறிவாளனை பிணையில் விடுவிக்க சட்டத்தில் எந்த தடையும் இல்லை எனவும், விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் சட்டத்துறை சார்பில் பரிந்துரைத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்ததாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. .

இதன்படி, தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி சிறந்த தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்