தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக விக்ரமன் மூன்றாவது தடவையாக தெரிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக விக்ரமன் மூன்றாவது தடவையாக தெரிவு

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக விக்ரமன் மூன்றாவது தடவையாக தெரிவு

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 5:58 pm

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக வ.விக்ரமன் மூன்றாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) காலை ஆரம்பமாகி, மாலை வரை நடைபெற்றது.

இதில், புதிய அலைகள், புது வசந்தம் என இரு அணிகள் போட்டியிட்டதுடன், மொத்தம் 2037 வாக்குகளில் 1565 வாக்குகள் அளிக்கப்பட்டன.

புது வசந்தம் அணியைச் சேர்ந்த இயக்குனர் விக்ரமன் 1532 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

செயலாளராக ஆர்.கே செல்வமணியும், பொருளாளராக இயக்குனர் பேரரசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்