ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்

ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்

ஜெர்மனியில் தூணில் மோதிய கேபிள் காரால் அந்தரத்தில் தொங்கிய பயணிகள்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 5:23 pm

ஜெர்மனியில் ரெகின் ஆற்றின் மேல், தூணில் மோதி கேபிள் கார் போக்குவரத்து தடைப்பட்டதால் பலர் அந்தரத்தில் தொங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதில் சிக்கிக்கொண்ட 75 பேரை மீட்பதற்கு கொலோனிலுள்ள தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புதவி அணியினர் கிரேனைப் பயன்படுத்தியுள்ளனர்.

40 மீட்டர் (130 அடி) உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டோரில் குழந்தைகளும் அடங்குவதுடன், காயமுற்றோர் தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.

இந்த சம்பவம் இடம்பெற்றபோது, அங்கிருந்த 32 கேபிள் கார்களும் இயங்கிக் கொண்டிருந்தன.

கேபிள் கார்களில் ஒன்று ஆதார அமைப்பின் ஒரு பகுதியில் மாட்டிக்கொண்ட காரணத்தால், போக்குவரத்து முழுவதும் நின்றுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

 

_97137302_3de347a5-5d68-4091-85ad-02f8303287ed _97137304_905c7b1e-8460-4f72-8698-69ff75428aa2 _97137305_7cd3ea75-4f25-4389-a784-f40d9db4e78a _97137306_a2e190f8-6464-4f77-b7a9-7a354a5d5ae4 _97137307_08ba7ecc-c582-4ee0-9af1-37fd739b0a96


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்