கோண்டாவில்லில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

கோண்டாவில்லில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

கோண்டாவில்லில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:31 pm

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், நேற்று முன்தினம் (30) இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

நல்லூரைச் சேர்ந்த 20 வயதான திவராசா மதுஷன் மற்றும் மானிப்பாயைச் சேர்ந்த 23 வயதான விஜயரத்னம் ஜீவராஜ் ஆகியோரே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரு சந்தேகநபர்களும் யாழ். மற்றும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேநகபர்கள் இருவரும் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

காயமடைந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்