ஊழலற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கிலான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

ஊழலற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கிலான தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 3:47 pm

ஊழலற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கிலான தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இன்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

25 மாவட்டங்களிலுமுள்ள மக்களின், ஊழலுக்கெதிரான குரலை வௌிக்கொணரும் நோக்கில் இந்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், யாழ். குழுவினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தனர்.

வடமராட்சி, வலிகாமம் வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இந்த குழுவினர் செல்லவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்திற்கு சென்றுள்ள மற்றுமொரு குழுவினர் கிரிவிகாரைக்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்தக் குழுவினர், கதிர்காமம் பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்களை தௌிவுபடுத்தவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்