இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் தினேஷ் சந்திமால்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் தினேஷ் சந்திமால்

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: தலைமைப் பொறுப்பை ஏற்கிறார் தினேஷ் சந்திமால்

எழுத்தாளர் Bella Dalima

01 Aug, 2017 | 8:38 pm

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தினேஷ் சந்திமால் தயாராகியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் தினேஷ் சந்திமால் இடம்பெற்றுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்திய ரங்கன ஹேரத் உபாதைக்குள்ளான போதிலும் இரண்டாவது போட்டிக்கான குழாத்திலும் இடம்பிடித்துள்ளார்.

காயமடைந்த அசேல குணரத்னவுக்கு பதிலாக லஹிரு திரிமான்ன பெயரிடப்பட்டுள்ளார்.

முதல் போட்டியில் விளையாடிய சுரங்க லக்மால் நீக்கப்பட்டு லக்சான் சந்தகேனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1-0 எனும் ஆட்டக்கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்