திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் விஜயராஜ்

திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமையால் இலட்சியத்தை நோக்கி பயணிக்க முடியாமல் தவிக்கும் விஜயராஜ்

By Sujithra Chandrasekara

07 Aug, 2017 | 9:11 pm

மாகாண மட்டத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகள் தேசிய ரீதியில் பிரகாசிக்கும் வாய்ப்பை உருவாக்குகின்றன.

ஆனால் இதற்கான சந்தர்ப்பங்கள் அமைவது சிலருக்கு எட்டாக்கனியாகவே இருக்கின்றது.

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் விஜயராஜ் என்ற கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்கள்

கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்டத்தில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் .

அதற்கான சான்றுகள் பல உள்ளன.

மாகாண மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழும் விஜயராஜின் இலட்சியம் இலங்கை கிரிக்கெட் குழுவில் இணையவேண்டும் என்பதே.

என்றபோதிலும் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்கான போதிய பௌதீக வளங்கள் இல்லை என்பதே இந்த வீரரின் ஏக்கமாக இருக்கின்றது.

பௌதீக வளங்கள் சரியான முறையில் வழங்கப்பட்டால் விஜயராஜும் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக பிரகாசிப்பார் என்பது திண்ணம்.