உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்

உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்

உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலை வௌியிட்டது ஃபோர்ப்ஸ்

எழுத்தாளர் Bella Dalima

23 Aug, 2017 | 4:42 pm

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிக அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் மார்க் வால்பெர்க் 408 கோடி ரூபா வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சல்மான்கான், அக்க்ஷய்குமார் ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர்.

திரைப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிச்தொகுப்பு ஆகியவற்றிற்காக நடிகர்கள் பெறும் மொத்த வருமானத்தின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் 228 கோடி ரூபா வருமானத்துடன் எட்டாவது இடத்திலும், சல்மான் கான் 222 கோடி ரூபா வருமானத்துடன் ஒன்பதாவது இடத்திலும் அக்க்ஷய் குமார் 213 கோடி ரூபா வருமானத்துடன் 10 வது இடத்திலும் உள்ளனர்.