ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 7:26 pm

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக, துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கையை திருட்டுத்தனமாகவும் இரகசியமாகவும் கைச்சாத்திடும் செயற்பாட்டை மக்கள் கண்டிப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சந்திரசிறி மஹகமகே குறிப்பிட்டார்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டின் தொழிலாளர்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்