ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்தானது

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை கைச்சாத்தானது

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 6:04 pm

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகளை அரச தனியார் கூட்டு வர்த்தகமாக முன்னெடுப்பதற்கான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை அரசாங்கம், சீனாவின் China Merchant Port Holdings நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பிலான அனுசரணை ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவை அமைச்சில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் 300 தொடக்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு செய்யப்படுவதுடன், அதனூடாக ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வர்த்தக அபிவிருத்திகளை எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்