இலங்கையர்களை  ஏற்றிச்சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

இலங்கையர்களை  ஏற்றிச்சென்ற கப்பல் வடக்கு சைப்ரஸ் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 6:58 pm

வடக்கு சைப்ரஸ் ஊடாக இலங்கையர்கள் சிலரை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று அந்நாட்டு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக குறித்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், இந்த கப்பலில் உள்ள இலங்கையர்கள் குறித்தும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கப்பலில் 20 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்கள புகலிடக் கோரிக்கையாளர்களா அல்லது பயிற்சிகளில் ஈடுபடும் கடற்படையினரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜிபுட்டியிலிருந்து லிபியா நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த ”சீ ஸ்டார்” என்ற கப்பலே சைப்ரஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பல் சைப்ரஸை நோக்கி பயணித்தமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையர்கள் ஜிபுட்டியிலிருந்து கப்பலில் ஏறியுள்ளதாகவும் அங்கிருந்து கடல் மார்க்கமாக எகிப்துக்கு பயணித்து, பின்னர் அங்கிருந்து விமானம் ஊடாக இலங்கை வர திட்டமிட்டுள்ளனர்.

எனினும், தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 இலங்கையர்களில், ஐந்து பேர் தங்களுக்கு சைப்ரஸில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாம் கடற்படையினர் இல்லை எனவும், இத்தாலிக்கு செல்வதற்கு 16 ஆயிரம் யூரோக்களை வழங்கியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகங்களினூடாகவே இலங்கை வௌிவிவகார அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் இவர்கள் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்