இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி

எழுத்தாளர் Bella Dalima

29 Jul, 2017 | 5:53 pm

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 600 ஓட்டங்களையும், இலங்கை 291 ஓட்டங்களையும் பெற்றன.

309 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்தியா, நான்காம் நாளான இன்று 240 ஓட்டங்களைப் பெற்று இரண்டாம் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

அணித்தலைவர் விராட் கோஹ்லி டெஸ்ட் அரங்கில் தனது 17 ஆவது சதத்தை எட்டினார்.

வெற்றி இலக்கான 550 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணியின் முதலிரண்டு விக்கெட்டுக்களும் 29 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.

என்றாலும், ஜந்தாவது விக்கெட்டுக்காக இணைந்த நிரோஷன் திக்வெல்ல, திமுத் கருணாரத்ன ஜோடி 101 ஓட்டங்களைப் பகிர்ந்து நம்பிக்கையளித்தது.

நிரோஷன் திக்வெல்ல டெஸ்ட் அரங்கில் 5 ஆவது அரைச்சதத்தை எட்ட , திமுத் கருணாரத்ன 12 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார்.

திமுத் கருணாரத்ன 97 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இந்தியாவின் வெற்றி பிரகாசமானது.

ஏனைய வீரர்களும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 245 ஓட்டங்களுக்குள் முடிவுக்கு வந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஷிகர் தவான் தெரிவானார்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்