பாடசாலைகள் மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

பாடசாலைகள் மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

பாடசாலைகள் மட்டத்திலான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

28 Jul, 2017 | 3:40 pm

பாடசாலைகள் மட்டத்திலான மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது.

மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தைக் கண்காணிப்பதற்கு விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

இதன் ஒரு கட்டமாக கொழும்பிலும் இன்று பாடசாலைகள் தோறும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில், கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் கல்லூரியில் இடம்பெற்ற சுத்திகரிப்புப் பணிகளில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

அதிகரித்து வரும் டெங்கு பரவலைத் தடுக்கும் வகையில், கல்வி அமைச்சு பாடசாலைகள் தோறும் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்