ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவில் சட்டம் நிறைவேற்றம்

ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவில் சட்டம் நிறைவேற்றம்

ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்காவில் சட்டம் நிறைவேற்றம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 12:10 pm

ரஷ்யா, ஈரான், வடகொரியா மீது புதிய பொருளாதார தடை விதிக்க அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியது.

பொதுவாக அமெரிக்க நலனுக்கு எதிராக செயல்பட்டதாகவும், அமெரிக்காவையும், அதன் நட்பு நாடுகளையும் பலவீனப்படுத்துவதாகவும் ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய 3 நாடுகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யா நேரடியாக தலையிட்டதாகவும், உக்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் தனது இராணுவத்தின் மூலம் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் கூறி அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

வடகொரியாவின் தொடர் அணுவாயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகளுக்காக அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த 3 நாடுகள் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான சட்டம், அமெரிக்க பாராளுமன்றத்தின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது.

விவாதத்திற்கு பின்னர் சட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பபட்டது.

இதனையடுத்து குடியரசு கட்சி, ஜனநாயகக் கட்சி என இரு கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவால் இந்த சட்டம் அங்கு நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்