ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு

ரவிராஜ் கொலை: லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 6:56 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட இரண்டாவது பிரதிவாதியான லெப்டினன்ட் கமான்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை உடனடியாகக் கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதி தங்கியுள்ளதாகக் கூறப்படும் கடற்படைத் தலைமையகம் மற்றும் அவரது தனிப்பட்ட முகவரிக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்ததுடன், அதற்கு இதுவரை அவர் பதில் வழங்கவில்லை என்றும் தெரிவித்தது.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர மற்றும் லலித் ஜயசூரிய ஆகியோர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.

ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு தொடர்பில் அவரது மனைவி தாக்கல் செய்த மேன்முறையீடு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்