யாழ். துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து கிளிநொச்சி, மலையகத்தில் கண்டனப் போராட்டங்கள்

யாழ். துப்பாக்கிப் பிரயோகத்தை கண்டித்து கிளிநொச்சி, மலையகத்தில் கண்டனப் போராட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 1:23 pm

நல்லூரில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு அற்றுசுருத்தல் ஏற்படும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து கிளிநொச்சியிலும், மலையகத்திலும் இன்று கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று முற்பகல் 10 மணியளவில் நீதிபதி இளஞ்செழியனுக்கு ஆதரவு தெரிவித்து கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட்டோரின் உறவினர்கள் ஏந்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

குறிப்பிட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பாக நீதியான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட பலரும் இந்த கண்டனப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்