யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 9:13 pm

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைதாகி, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபரே தப்பிச் சென்றுள்ளார்.

நீதிமன்ற சிறைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் போது அவர் தப்பிச் சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

சந்தேகநபரை யாழ். நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, சிறைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில், யாழ்ப்பாணம் – பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்