முறிகள் ஏலவிற்பனை இன்று முதல் புதிய நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படும்

முறிகள் ஏலவிற்பனை இன்று முதல் புதிய நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படும்

முறிகள் ஏலவிற்பனை இன்று முதல் புதிய நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படும்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 11:15 am

முறிகள் ஏலவிற்பனை இன்று முதல் புதிய நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தைக் கூறினார்.

புதிய நடைமுறைக்கு அமைவாக மாதந்தோறும் 15 ஆம் திகதி முறிகள் ஏலவிற்பனை இடம்பெறும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இரண்டு வடிவங்களாக இந்த நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் பிரதியமைச்சர் கூறினார்.

இந்த புதிய நடைமுறையின் கீழ், மோசடிகள் இடம்பெறாத வகையில் முறிகள் ஏலவிற்பனையை மேற்கொள்ள முடியுமா என ஊடகவியலாளர்கள் இதன்போது பிரதியமைச்சரிடம் வினவினர்.

எந்த நடைமுறையாயினும், மோசடி பேர்வழிகளால் முறைகேடுகளில் ஈடுபட முடியும் என சுட்டிக்காட்டிய பிரதியமைச்சர், அமெரிக்காவிலோ அல்லது இலங்கையிலோ அல்லது சீனாவிலோ எந்த நாடாயினும் மோசடியில் ஈடுபடலாம் எனக் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முன்னைய வழிமுறையின் கீழ், முறிகள் ஏல விற்பனையில் வெளிப்படைத் தன்மை காணப்படவில்லை என்றும், புதிய நடைமுறையின் கீழ் 100 வீதம் வெளிப்படைத் தன்மை பேணப்படுவதாகவும் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்