பாடசாலைகள் மட்டத்திலான மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

பாடசாலைகள் மட்டத்திலான மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

பாடசாலைகள் மட்டத்திலான மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Jul, 2017 | 8:34 am

பாடசாலைகள் மட்டத்திலான மூன்று நாள் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாதம் 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று நாட்களில் பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை கண்காணிப்பதற்கு விசேட குழுக்களை ஈடுபடுத்துவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலுள்ள தேசிய மற்றும் தனியார் பாடசாலைகளை கண்காணிப்பதற்காக கல்வி அமைச்சு மட்டத்திலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சுகாதார மற்றும் போஷணைப் பிரிவு பணிப்பாளர் ரேணுகா பீரிஸ் குறிப்பிட்டார்.

அமைச்சு மட்ட குழுவிற்கு 37 உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள மற்றைய பாடசாலைகளை கண்காணிப்பதற்காக 250 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் மற்றைய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாகாண மற்றும் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற காலப்பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதற்குரிய உடைகளில் பாடசாலைக்கு வருவதற்காகன சந்தர்ப்பமும் வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்