நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: முரண்பாடான கருத்துக்களும் வதந்திகளும் வருவதாக நாமல் தெரிவிப்பு

நீதிபதி மீது துப்பாக்கிப் பிரயோகம்: முரண்பாடான கருத்துக்களும் வதந்திகளும் வருவதாக நாமல் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Jul, 2017 | 9:33 pm

யாழ்ப்பாணத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில், நீதிபதி ஒரு கருத்தையும் பொலிஸார் ஒரு கருத்தையும் சரணடைந்த சந்தேகநபர் வேறொரு கருத்தையும் கூறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

சவாலுக்காக தான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சரணடைந்த நபர் கூறுவதால், சவாலை நிறைவேற்ற எவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வார்களோ தெரியாது என நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

உண்மையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டாரென யாழ்ப்பாணத்திலிருந்து வரும் வதந்திகள் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இக்கருத்துக்களைக் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்